முல்லைத்தீவிலும் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.
வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள்
இதேவேளை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் மாவட்டத்தின் நட்டாங்கண்டன்டல், மல்லாவி, ஐயன்கன்குளம், மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ,முள்ளியவளை , முல்லைத்தீவு, கொக்கிளாய், வெலிஓயா ஆகிய பத்து பொலிஸ் நிலையங்கள் என பதின்மூன்று வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 11 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri