நுவரெலியாவில் இரண்டாவது நாளாக நடைபெறும் தபால்மூல வாக்களிப்பு
நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாடாளவிய ரீதியில் உள்ள அரச ஊழியர்கள் பொது தேர்தலுக்காக தபால்மூல வாக்குகளை அளித்து வருகின்றனர்.
இம்முறை பொதுத்தேர்தலுக்காக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் 20,502 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு நடவடிக்கைகள்
தபால் மூல வாக்கெடுப்புக்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள், பிரதேச செயலகங்களில் பணிபுரிபவர்கள், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
ஹட்டன் பஸ் டிப்போவில் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றது.
இதன்படி முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளிப்புக்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பினை அளிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பொதுத்தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்ட 17 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
