கிளிநொச்சியில் அஞ்சல் வாக்குச்சீட்டுக்களைப் பொதியிடும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி (Kilinochci) மாவட்டத்தில் அஞ்சல் வாக்குச்சீட்டுக்களைப் பொதியிடும் குழு உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்றைய தினம் (23) மாலை 2.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கடமை - பொறுப்புக்கள்
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.

மேலும், இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) இ. நலாஜினி, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.











கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam