வவுனியா தபால் அலுவலகத்திற்கு தாமதமாக கடிதங்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டு
கோவிட் தொற்று பரவல் காரணமாக புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் கொழும்பில் இருந்து வட மாகாணத்திற்கு அனுப்பப்படும் தபால்கள் அநுராதபுரம் மாவட்டத்தில் பெற்று கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த தபால்கள் அநுராதபுரத்திற்கு அதிகாலை 2 மணிக்கு கொண்டு வரப்படும் நிலையில் அவை யாழ். தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தில் எடுத்து வரப்பட்டு வவுனியாவிற்கு வழங்கப்படுகின்றது.
இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன் காலை 6 மணியளவிலேயே வவுனியா தபால் அலுவலகத்திற்கு கடிதங்கள் கிடைப்பதாக குற்றம் சாட்டப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு காலதாமதம் ஏற்படுவதால் தபால் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக காணப்படுவதுடன், பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய தபால்களும் உரிய நேரத்தில் கிடைக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பொதிகளும் வாகனத்தில் இடவசதி இன்மையால் அநுராதபுரத்திலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வவுனியா தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வாகனத்தின் மூலமே அநுராதபுரத்திற்கு வருகின்ற தபால்கள் பெற்று கொள்ளப்பட்டிருந்தது.
இதனால் அதிகாலை 4 மணியளவில் வவுனியா மாவட்டத்திற்கான தபால்கள் கிடைத்துவிடும். ஆகையால் அன்றையதினமே அதனை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான செயற்பாட்டை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது.
எனவே முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது போல வவுனியா தபால் அலுவலகத்திற்கு சொந்தமான வாகனத்தினை அனுப்பி அநுராதபுரத்தில் உள்ள தபால்களை பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா தபால் திணைக்கள ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
