தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
சாதாரண தபால் கட்டணங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, சாதாரண கடித தபால் கட்டணமானது 15 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் தற்போது குறைந்தபட்ச விலையாக 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் 250 கிராம் எடையுள்ள பொருட்களுக்கான சரக்கு கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலக கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதால், சாதாரண கடிதம், வணிக அஞ்சல், பொதித் தபால் மற்றும் மொத்த அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.
இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டு தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன. ஜனவரி 2018க்குப் பிறகு முதன்முறையாக தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.