தபால் பணியாளர்களின் விடுமுறை ரத்து
தபால் திணைக்களத்தின் பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களதும் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் இந்த விடுமுறை ரத்து அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் பணியாளர்களின் விடுமுறை ரத்து தொடர்பில் தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பீ சாந்தகுமார ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி தபால் திணைக்களத்தில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அனைத்து பணியாளர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அனைத்து பிரதி தபால் மா அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பிரதிகள் சுகாதாரம், ஊடகத்துறை அமைச்சு செயலாளர் உள்ளிட்ட தபால் சேவையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
