தபால் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்தனர்.
அஞ்சல் தொலைதொடர்பு சேவையாளர் சங்கம், அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கம் என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் .இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
கடந்த வருடம் அமைச்சரவையில் தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த விடயங்களை தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரை நடைமுறைப்படுத்தாததனை சுட்டிக்காட்டி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அனைத்து தரப்பு வெற்றிடங்களையும் உரிய முறையில் நிரப்ப வேண்டும், அமைச்சர் உறுதி அளித்த விடயங்களை உடன் நிறைவேற்ற வேண்டும், பதவி உயர்வுகளுக்கு காலம் தாழ்த்தாது உடன் வழங்க வேண்டும், தபால் திணைக்கள புதிய நியமன முறையை உடன் அமல்படுத்த வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 18ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப் பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தினை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் இவ்வார்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 13 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam
