எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேர்தலின் பின்னர் அநுர வசம் : கிரியெல்ல எம்.பி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும் எதிரணி பிரதம கொறடாவுமான லக்சுமன் கிரியெல்ல(Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, கிராமிய மட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு அலை வீசுகின்றது. தம்மை அவர் பார்த்துக்கொள்வார் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
எனவே, உள்நாட்டில் சஜித்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி எமக்குச் சவாலாக அமையாது. ஆனாலும், மொட்டுக் கட்சியினரை விட கூடுதல் வாக்குகளைப் பெறுவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய வாக்கு வங்கியில் ஒரு பகுதி எமக்கும் வரும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தேசிய மக்கள் சக்தியே பெறும் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |