பொசொன் பெளர்ணமி தினத்தில் வழங்கப்பட்ட வித்தியாசமான தானம்
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம் பௌத்த மக்களின் புனித நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தினங்களில் பௌத்த மக்கள் தானம் வழங்கி வருவது வழமை.
குறிப்பாக உணவு தானம், ஐஸ் கிறீம் தானம், குளிர்பான தானம் என பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டு வருவது வழமை.
வித்தியாசமான தானம்
எனினும், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட பெளத்த மக்களின் முக்கிய தினமான பொசொன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஹொரணையில் வித்தியாசமான முறையில் தானம் ஒன்று இடம்பெற்றது.
தலைமுடியை வெட்டுவதற்கான தானம் என்று இது கூறப்பட்டது.
அழகுக்கலை நிபுணரான ஷியாமலி விஜேரத்ன இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவரது சிஷ்யர்கள் முடிதிருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 104 பேருக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.