பதினாறு மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமரினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கி வைப்பு(Photos)

Keheliya Rambukwella Mahinda Rajapaksa Asela Gunawardena W.I.Amarasinghe
By Dilshan Nov 27, 2021 08:28 AM GMT
Report

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் (Mahinda Rajapaksa) மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வின் போதே இந்த மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கிவைக்கப்பட்டது.

இம்மாநாட்டில் பிரதமருடன் அவரது மனைவி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்களான பேராசிரியர் டப்ளிவ்.ஐ.அமரசிங்க, எரந்தி சமரகோன், எம்.சதானந்தன், எஸ்.எல்.எஃப்.அக்பர், எஸ்.கே.ரணராஜா, சனத் லென்ரோல், எஸ்.பீ.ஏகநாயக்க, கௌரி செந்தில்நாதன், எஸ்.ஷிவசுமித்ரன், ராணி சீதாம்பபிள்ளே, தர்ஷன டி சில்வா, எம்.என்.ஜிஃப்ரி, டி.கடோட்கஜன், கிரிஷான் சில்வா, நிஷேந்திர கருணாரத்ன, எச்.எம்.ஜே.என்.ஹேரத் ஆகியோர் இவ்வாறு மருத்துவ பேராசிரியர் சான்றிதழ்களை பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

பேராசிரியர் டீ.ஏ.ரணசிங்க நினைவுரையை இதன்போது பேராசிரியர் எஸ்.எச்.தொடம்பஹலவினால் நடத்தப்பட்டது.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா அதற்கான அழைப்பை விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella), சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (Asela Gunawardena), மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் டப்ளிவ்.ஐ.அமரசிங்க (W.I.Amarasinghe), தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா (Pradeep de Silva) உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US