மட்டக்களப்பில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள துறைமுகங்கள்! அமைச்சர் டக்ளஸ் உறுதி
கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய படகுகளை தரித்து நிற்கும் துறைமுகங்களை அமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை விஜயம் செய்த அமைச்சர் அங்கு பல்வேறு சந்திப்புகளை மீனவர்களுடன் நடத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்தியவிநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டதுடன், ஆலய நிர்வாகத்துடனும் கலந்துரையாடி பெரியகல்லாறு பிரதேசத்தின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது பெரியகல்லாறு பிரதேசம் நீண்டகால மீன்பிடியில் ஈடுபட்டு வரும் பகுதியென்பதால் அங்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரதேச மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.





100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri