காலியிலும் துறைமுக நகரம்
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக முதலீட்டாளர்களுக்கு விளக்க இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.
காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய நீர் பிரிப்பு தடாகத்துடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக இது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abegunawardana) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் காலி துறைமுகத்திற்கு புதிதாக 40 ஹெக்டேயர் அதாவது 100 ஏக்கர் நிலப்பரப்பு கிடைக்கவுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் போன்று காலி (Galle) பிரதேசத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த ஹொட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. தேசிய முதலீட்டாளர்கள் மூலம் புதிய அபிவிருத்தியை பிரதேசத்தில் ஏற்படுத்த உள்ளதாகவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
