கொழும்பு துறைமுகநகரத்திற்கு புதிய விசா வகைகள் அறிமுகம்: அமைச்சரவை அனுமதி
கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்குவற்காக புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கீழ்க்காணும் வீசா வகைகளை அறிமுகப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய உத்தேச விசா வகைகள்
1.வதிவிட விசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் விசா” வகை.
2.சேவை வழங்குநர்களுக்கான “சேவை வழங்குநர் விசா” வகை.
3.கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான “சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்” விசா வகை என 3 வகையான விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri