யாழ். மக்களின் இதயங்களை வென்ற போராட்டம் திரைப்படம் - இன்று திரையரங்குகளில்..
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, திரையரங்கில் வெளியாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி யாழ்ப்பாணம் ரீகல் திரையரங்கில் நேற்று(01.10.2026) திரையிடப்பட்ட நிலையில், இன்று(02.10.2026) உத்தியோகப்பூர்வமாக திரையில் வெளியாகியுள்ளது.
போராட்ட திரைப்படமானது, உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாக ஈழத்தை களமாக கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன், கதாநாயகியாக நிவேதிகா இராசையா நடித்துள்ளார். இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசை அமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவாளராக ஏ.கே கமலும் பணியாற்றியுள்ளனர்.
இன்று திரையரங்குகளில் வெளியானது..
படத்தில் பாடல்களை வாகீசன் இராசையா, உமாகரன் இராசையா , பொத்துவில் அஸ்மீன் , பூவன் மதீசன், கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் உள்ளிட்டோர் எழுதியுள்ளனர்.

பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா, பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா ஆகியோருடன், ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன் இராசையா, கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன் , டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் திரையிடல்கள் வெளிநாடுகளிலும் இடம்பெற்று வருவதுடன் , இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளிலும் திரையிடலுக்கான பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வந்த நிலையில், இன்று(02.10.2026) உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
