ஈழத் தமிழ் சினிமாவின் புதிய படைப்பு! ஜெர்மனியில் திரையிடப்படவுள்ள போராட்டம்
இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஜெர்மனியிலும் பல நகரங்களில் திரையிடப்படவுள்ளது.
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா வழங்கும் இந்தத் திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
போராட்டம் திரைப்படம்
பூவன் மதீசன் இசையமைத்துள்ளதுடன், றீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பெர்லின், டிரெஸ்டன், எஸ்லிங்கன், லியோன்பெர்க், ஸ்வாபிஷ் க்முண்ட், போகும், கார்ல்ஸ்ரூஹே, பிரேமன், எசன், ஹனோவர், முனிச், ஒஃபென்பாக், ஸ்டுட்கார்ட் மற்றும் வுப்பர்டால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் ரசிகர்கள்
இதனிடையே, ‘போராட்டம்’ திரைப்படம் இலங்கைக்கு வெளியிலும் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் தமிழ் ரசிகர்களை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போராட்டம்’ திரைப்படத்தின் ஜெர்மனி திரையிடல் அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan