ஆளும் கட்சி அமைப்பாளரை எச்சரித்த போரதீவுப் பற்று தவிசாளர்
மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்குள் தானும் மூக்கை நுழைக்க வேண்டுமென நினைப்பதை ஆளும் கட்சி அமைப்பாளர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறித்த பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.
போரதீவுபற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள முனைத்தீவு கிராமத்தின் தளபத்து வீதியைப் புனரமைக்கும் பணி இன்று(01.09.2025) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த அமைப்பாளர் மக்களால் தேர்வு செய்யப்பட்டு எமது பிரதேசத்திற்கு வந்து சேவை செய்வதற்கு நாங்கள் பூரணமாக இடம் வழங்குகின்றோம்.
வேலைத் திட்டங்கள்
மக்களால் தேர்வு செய்யப்படாமல் வெறுமனே அமைப்பாளராக மாத்திரம் வந்து கொண்டு இந்தப் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்குள் தானும் மூக்கை நுழைக்க வேண்டுமென நினைப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இனிவரும் காலங்களிலும் இவ்வாறு முனைய வேண்டாம் என்பதையும் நான் குறித்த அமைப்பாளருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். போரதீவுப் பற்று பிரதேச சபையின் ஊடாக பல வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இனிவரும் காலங்களில் எமது பிரதேச சபைக்குரிய வருமானத்தை அதிகரிக்கக் கூடிய பல வழிகளை நாம் நான் தவிசாளர் என்ற வகையில் தேடிக் கொண்டிருக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri
