கோட்டாபயவுக்கு எதிராக தெற்கில் தொடரும் மக்கள் போராட்டங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரியும் மேல் மாகாணத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவர்கள் பங்கேற்று, தமது எதிர்ப்பை .வெளிப்படுத்தி வருகின்றனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடங்களில் மேலதிகமாகப் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தில்
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை
பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
