மகிந்தவுக்கு எதிரில் மோதிக்கொண்ட பொதுஜன பெரமுனவின் பிரபலங்கள்
பொதுஜன பெரமுனவுக்குள் பெரிய பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவின் முன்னிலையில் மோதிக்கொண்ட சாகர மற்றும் ரணவீர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போது, ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இடையில் மோதலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரசன்ன ரணவீர, சாகர காரியவசத்தை நேருக்கு நேர், தகாத தூஷண வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இப்படியான சம்பவம் ஒன்று நடைபெற்றது இதுவே முதல் முறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பிரசன்ன ரணவீரவுக்கும் சாகர காரியவசத்திற்கும் இடையிலான மோதல் சம்பந்தமாக அனைவரும் கேட்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலும் இருவரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கோபா குழுவிற்கான உறுப்பினர்கள் பட்டியலில் இருந்த பிரசன்ன ரணவீரவின் பெயரை சாகர காரியவசம் நீக்கியதே இவருக்கும் இடையிலான முறுக்கலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan