முடியாத நிலையிலும் அனைவரின் பாதங்களையும் முத்தமிட்ட பரிசுத்த பாப்பரசர்
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளாக கருதப்படும் புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் பாதம் கழுவும் சடங்கில் கலந்துகொண்டு மிகவும் உருக்கமான வகையில் பாதங்களை கழுவி முத்தமிட்டமையானது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.
அதிக வயதிலும் கூட தொடர்ச்சியாக வைத்தியசாலை மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஓரிரு தினங்களுக்கு பின் வழமைக்கு திரும்பினார்.
இந்நிலையில் நேற்றையதினம் புனித வியாழன் தினத்தை முன்னிட்டு ரோமில் உள்ள ரெபிபியா திருத்தலத்தில் வழிபாடு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது அங்கிருந்த சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியில் கூடியிருந்த கைதிகள், காவலர்கள், மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளுக்கான கால்களைக் கழுவும் சடங்கிற்கு அவர் தலைமை தாங்கினார்.
இதன்போது திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்தவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டதுடன் மக்கள் கண்ணீருடன் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.