யுத்த பூமியான உக்ரைனுக்கு செல்ல தயாராகும் பாப்பரசர் பிரான்ஸிஸ்
உக்ரைனில் உயிர்த்த ஞாயிறு போர் நிறுத்தத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார், இது பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஞாயிறு ஆராதனையின் முடிவில், "ஆயுதங்களைக் கீழே போடுங்கள்!" என்று கூறியுள்ளார் "அத்துடன் உயிர்த்த ஞாயிறு போர் நிறுத்தம் தொடங்கட்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிரான படுகொலைகள் கொடூரமான கொடுமையாகும். இந்தநிலையில் இடிபாடுகளின் மீது கொடி நாட்டுவதில் என்ன வெற்றி? என்று அவர் ரஷ்யாவின் பெயரை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைனில் சண்டையை நிறுத்துவதற்கு தனது பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்த பாப்பரசர் கிவ் செல்ல தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் .