பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனையில் சர்வதேச தலைவர்கள்..!
புதிய இணைப்பு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட ஆர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிலிப்பைன்ஸ், போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளும், பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து பிரதமர்களும், பல ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் (Pope Francis) இறுதி ஆராதனைகள் இன்று(26) இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இறுதித் திருப்பலியை கர்தினால் குழுமத்தின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
