பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு வவுனியாவில் அஞ்சலி
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்றது.
பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க நிகழ்வுகள் நேற்றையதினம் வத்திக்கானில் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கையில் நேற்றையதினம் துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுகள்
இந்தநிலையில், நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களால் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, வவுனியா - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகைக்கு முன்னால் கையில் தீபமேந்தியவாறு அஞ்சலி செலுத்தியதுடன், பரிசுத்த பாப்பரசரின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபமும் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை அங்கிருந்த சில புலனாய்வாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை புகைப்படம் எடுத்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் படம் எடுத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததென அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam
