வத்திகானில் இருந்து இஸ்ரேல்- காசா போர் பற்றிய போப் பிரான்சிஸின் ஈஸ்டர் செய்தி..!
உயிர்த்த ஞாயிறு தின தினமான இன்றையதினம்(20) ஈஸ்டர் செய்தியை கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(Pope Francis) பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்று ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (20) மக்களை நேரடியாகச் சந்தித்துள்ளார்.
காசாவின் நிலை
உலக அமைதியை வலியறுத்திய அவரது உரையில்,

காசாவின்(Gaza) நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
88 வயதான போப், சுவாசக் கோளாறு காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி மருத்துவமனைக்குச் சென்ற அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வத்திக்கானுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam