நல்லடக்கம் செய்யப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் உடல்
மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல் ரோம் தேவாலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் 30 நிமிட ஆராதனைகளுக்கு பின்னர் இன்று(26.04.2025) அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இதன்போது, பாப்பரசரின் சவப்பெட்டியை சிவப்பு மெழுகு முத்திரைகளால் கர்தினால்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
7 பாப்பரசர்களின் கல்லறை
அத்துடன், பாப்பரசர் பிரான்சிஸின் கல்லரையில் இலத்தீன் மொழியில் அவரது பெயர் 'ஃபிரான்சிஸ்கஸ்' என எழுதப்பட்டுள்ளது.
Pope Francis' coffin has been entombed.
— Vatican News (@VaticanNews) April 26, 2025
The Pope's final resting place is the Basilica of St. Mary Major in central Rome.
Hundreds of thousands of people lined the streets to watch as his coffin was brought from the Vatican to the Basilica.
The Pope is the first in over a… pic.twitter.com/50HhHs9LIP
தான் இறந்த பின்னர் ரோம் தேவாலயத்திற்குள் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பத்தை பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 2023ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, ஏற்கனவே இந்த பேராலயத்தில் 7 பாப்பரசர்களின் கல்லறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த பயிற்சி வகுப்புகளும் இல்லாமல் தினமும் 12 மணி நேரம் படித்து UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
