சிறப்பு பிரார்த்தனையின் போது மக்கள் மத்தியில் கண்ணீர் விட்டழுத பாப்பரசர்
இத்தாலி தலைநகர் ரோமிற்கு வருடாந்த கிறிஸ்மஸ் யாத்திரைக்காக சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
அதை தொடர்ந்து உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதுள்ளதாக தெரியவருகிறது.
அப்போது அவர் “உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

10 மாதங்கள் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பு
உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்வு
அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசியிருந்ததாகவும் தெரியவருகிறது.
மேலும், உக்ரைன் போர் குறித்து பேசும்போது பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri