45 பேரை புனிதர் நிலைக்கு உயர்வு! திருத்தந்தை 16ஆம் பெனடிக்டின் மகத்தான சேவைகள்
மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் பண்புகளும் மிகச்சிறப்பான செயல்களும் தற்போது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எட்டாண்டுகால திருத்தந்தை தலைமைத்துவப் பணி பற்றியும், அவர் புனிதர் நிலைக்கு தகுதிப்படுத்தியவர்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.
டிசம்பர் 31 சனிக்கிழமை காலை இவ்வுலகை விட்டு மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் தனது திருத்தந்தைப் பதிவிக்காலத்தின் போது 870 பேரை அருளாளர் நிலைக்கும், 45 பேரை புனிதர் நிலைக்கும் தகுதிப்படுத்தியப் பெருமைக்குரியவர் என்று தகவல்கள் கூறுகின்றன.
2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் மிகவும் சிறப்பாக திரு அவையை வழிநடத்தியவர் என்றும், குறுகிய கால ஆண்டு என்றாலும் அவர் புனிதர்களாக தகுதிப்படுத்திய 45 பேரும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களால் நம்பிக்கை மற்றும் புனிதத்துவத்தின் மாதிரியாக போற்றப்படுகின்றவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், Jacques Berthieu, Pedro Calungsod, Giovanni Battista Piamarta, Maria Carmen Salles y Barangueras, Marianne Cope, Caterina (Kateri) Tekakwitha, and Anna Schaffer என்னும் எழுவரே மறைந்த திருத்தந்தை பெனடிக்ட் அவர்களால் இறுதியாக புனிதராக்கப்பட்டவர்கள்.
புனித அல்போன்சா

இந்தியாவின் கேரளாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறந்த புனித அல்போன்சா 2008ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் நிலைக்கு தகுதிபடுத்தப்பட்டவர்.
புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணான புனித அல்போன்சா இறைவனுடைய அன்பிற்கு சாட்சியாக இறுதிவரை மகிழ்ச்சியாகவும், கள்ளம் கபடமற்ற புன்னகையை உதடுகளில் எப்பொழுதும் கொண்டிருந்தவர் என்று புனிதர் பட்ட நிகழ்வின் போது வத்திக்கானில் திருத்தந்தையால் புகழப்பட்டவர்.
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam