வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச
நாட்டின் அனைத்து வறிய குடும்பங்களுக்கும் மாதாந்தம் சுமார் இருபதாயிரம் ரூபா வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சேருவாவில பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு
சனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களின் நல்ல பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய திட்டம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ் இருபத்து நான்கு மாதங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
