பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா!
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின் பத்தாம் நாளான இன்று(20) புன்னைமர சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
பத்தாம் நாள் திருவிழா
வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஆவணி மகோற்சவம் கடந்த (11) ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் (26)ஆம் திகதி சப்பர இரதத் திருவிழாவும், (27) ஆம் திகதி இரதோற்சவமும், (28) ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையவுள்ளது.

இன்றைய பத்தாம் நாள் திருவிழாவில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வரதராஜப்
பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றுச் சென்றுள்ளனர்.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri