பொருள் விலையேற்றத்தில் பொங்கல்! ஆர்வம் காட்டாத மக்கள் (Video)
தைப்பொங்கல் பண்டிகையை இந்துக்கள் நாளை (14) கொண்டாடவுள்ள இந்நிலையில் பல பாகங்களிலும் தைப் பொங்கல் வியாபாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வருட தைப்பொங்கல் வியாபாரம் பெரிதும் களைகட்டியிருக்கவில்லை என வர்த்தகர்களும், பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பொருட்கள், மழிகைப் பொருட்ககள் மற்றும் ஆடைகள் வரைக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் மக்கள் பொருட்கள் வாங்குவதில் அதிகளவு நாட்டம் செலுத்துவது குறைந்திருப்பதாகவும் வர்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் பொதுச்சுகாதார
பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை வவுனியா மற்றும் மலையக பிரதேசங்களில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்கள் கொள்வனவு செய்துவருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. மலையக நகரங்களுக்கு பெருந்திரளான மக்கள் தொகை பூசை பொருட்களையும், அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதினை காணக்கூடியதாக இருந்தது.











ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
