பொலன்னறுவையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம்
இலங்கையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாக்களில் மிகச் சிறந்த பொங்கல் விழா, பொலன்னறுவையில் (Polonnaruwa) கொண்டாடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட சர்வசமய மதத்தலைவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பொங்கல் விழா ,திம்புலாகல அருகே நாமல் பொகுண பிரதேசத்தில் நேற்றைய தினம் (14) நடைபெற்றுள்ளது.
இதன் போது வடமத்திய மாகாண சைவ குருக்கள் அமைப்பின் தலைவர் சிவஶ்ரீ தயானந்தன் குருக்கள், தைப்பொங்கலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
பொங்கல் விழா
அத்துடன் தைப்பொங்கல் தொடர்பான கலைநிகழ்வுகளை தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து அரங்கேற்றியிருந்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக பிரதேசத்தில் சமூக சேவையாற்றி வரும் முக்கியஸ்தர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சர்வ சமயத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், மூவினங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam