ஆதிவாசிகளால் இரவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா
ஆதிவாசிகள் தங்களது பொங்கல் தினத்தினை முன்னிட்டு தைப்பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசை செய்வது வழக்கம்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசிகள் தைப் பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வத்தினை அழைத்துப் பொங்கல் பூசையினை செய்து வழிபட்டுள்ளனர்.
குஞ்சன்கல்குளம் பிரதேசத்தில் உள்ள வாராகி அம்மன் ஆலயம் மற்றும் நாககன்னி அம்மன் ஆலயம் என்பவற்றில் ஆதிவாசிகள் தங்களது வேடுவ தெய்வத்தினை வைத்து வழிபட்டு வரும் நிலையில் பூசைகள் யாவும் இங்கு நடைபெற்றுள்ளது.
இதில் ஆதிவாசிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து, துணிகளைக் காணிக்கையாக வேடுவ தெய்வத்திடம் வழங்கி ஆசி பெற்று பூசைகளில் கலந்து கொண்டதைக் காணக்கூடிய இருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட ஆதிவாசிகளின் தலைவர் ந.வேலாயுதம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இதன்போது வேடுவ தெய்வத்தினை அழைத்து பூசைகள் இடம்பெறும் போது தெய்வங்கள் ஆண்டவனிடம் சென்று எங்களுக்கு ஆசி வேண்டி வருவதுடன், நாங்கள் பூப்பெட்டியில் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து வழிபடுவோம்.
அப்போது அந்த பெட்டியில் உள்ள பூவை மணக்கும் போது பூசகரின் உடலில் தெய்வம் வரும்.
அத்தோடு பூசகரின் உடலில் தெய்வம் வந்து எங்கள் ஆதிவாசிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும்.
பொங்கல் தின நாள் இரவு எங்களுடைய தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும் நாங்கள் பொங்கலுக்குப் பதிலாகக் காட்டு பொன்னாவரைப் பூ வைத்து எங்களது வேடுவ தெய்வத்திற்கு வைத்து வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri