முகாவில் - இயக்கச்சி திரியாய் அம்பாள் தேவஸ்தான திருக்குளிர்த்திப் பொங்கல் விழா இன்று
யாழ். பச்சிளைப்பள்ளி - முகாவில், இயக்கச்சி அருள்மிகு திரியாய் அம்பாள் (பர்வதவர்த்தினி) தேவஸ்தான திருக்குளிர்த்திப் பொங்கல் விழா இன்றைய தினம் (02.06.2023) இடம்பெறுகிறது.
இன்றைய தினம் பகல், இரவு தொடர்ந்து விசேட அபிசேக ஆராதனைகளும், காவடி, பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகம், பறவைக் காவடிகள் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்றல்களும் தொடர்ந்து நீராகாரமும், மகேஸ்வர பூசையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான பாதுகாப்பு, முதலுதவி, சுகாதாரம் பேணல், குடிநீர் வசதி போன்றவைகள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்தால் திருப்திகரமாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
விசேட போக்குவரத்து ஒழுங்கு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தனியார் போக்குவரத்து சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.





