வவுனியாவில் அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு (Photos)
அமைச்சர் விமல் வீரவன்சவின் திட்டமிடலுக்கு அமைய வவுனியாவில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
அமைச்சரின் வன்னி மாவட்ட இணைப்பு செயலாளர் ம.புஸ்பதேவாவின் வழிகாட்டலில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் குறித்த பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இயற்கை பசளை இட்டு விளைவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியில் பொங்கல் நடைபெற்றது.
பௌத்த, இந்து, கத்தோலிக்க மத தலைவர்கள் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதில், நகரசபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா சு.குமாரசாமி, வர்த்தக சங்க செயலாளர் அம்பிகைபாகன், மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் சிறிதரன், வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுபதிகாரி அழகியவண்ண, வடமாகாண விமல் அணி தலைவர் சி.ஜோதிக்குமரன், விமல் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் இன்று பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டதுடன் கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொங்கல் பொங்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றதுடன் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
