மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பம்! முற்றாக நீரில் வற்றிப்போயுள்ள குளங்கள் (Photos)
கடும் வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம், உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளது.
கால்நடைகள் பாதிப்பு
இந்நிலையில் வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் அத்தாங்கு, கரப்பு, வலை, போன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மீன் பிடித்து வருவதோடு, உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளும் அக்குளங்களுக்கு இரைதேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், அப்பகுதியிலுள்ள
கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









