மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன்
நடைமுறைக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்து
வரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் சூழல் மாசடைவதோடு டெங்கு நுளம்பு பரவலும் அதிகரித்து வருகிறது.
இதனால், மன்னார் வைத்தியசாலையில் முதல் கட்டமாக பொலித்தீன் பைகளின் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கை
குறிப்பாக, சிகிச்சைக்காக வருபவர்கள், நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக உக்கக் கூடிய அல்லது மீள் பயன்படுத்தக்கூடிய பைகளை கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், பொலித்தீன் பைகளுடன் வருபவர்களிடம் இருந்து பொலித்தீன் பைகள் வாங்கப்பட்டு மாற்றீட்டு பைகள் தற்காலிகமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
