நாட்டை உலுக்கிய கோர விபத்து! பேருந்து தொடர்பில் வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்
பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அபராதம் விதிக்கும் சட்டங்கள்
மேலும் கூறுகையில்,“மனம்பிட்டிய பகுதியில் பாலத்திலிருந்து கீழ் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இல்லை.
மாகாண அதிகார சபையினால் ஏதேனும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஒழுங்கற்ற முறையில் இயங்கும் பேருந்துகளுக்கு தற்போது பெருமளவிலான அபராதம் விதிக்கும் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்றிரவு விபத்துக்குள்ளான பேருந்திற்கு எதிர்காலத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும்.
நீதிமன்ற நடவடிக்கை
இவ்வாறு முறையான அனுமதிபத்திரமின்றி வாகனங்கள் செலுத்துவது தொடர்பில் தகவல் கிடைத்ததும், நடமாடும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. சில சமயங்களில் இந்த குழுக்கள் வரும் நாட்களில் இந்தபேருந்துகள் ஓடுவதில்லை.
இதுபோன்ற பேருந்துகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்குகளும் உள்ளன. தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் எந்த அனுமதியும் இன்றி வாகனம் ஓட்டியுள்ளனர்.”என தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்து, மனம்பிடிய பகுதியில் நேற்று (09.07.2023) விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |