பக்தர்களுடன் விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து! 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை – சோமாவதி சுங்காவில பிரதான வீதியில் பக்தர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (24) காலை சுமார் 7.15 மணியளவில் இந்த விபத்து இடமபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
மினுவாங்கொட, திவுலபிட்டிய பகுதியிலிருந்து சோமாவதிய புனித தலத்திற்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற போது விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 24 பேர் இருந்துள்ளதுடன், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்களில் எட்டு பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும்,, மேலும் நான்கு பேர் புலஸ்திபுர பிராந்திய வைத்தியசாலையிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம்
மேலும், காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாமென கூறியுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam