சம்பள உயர்வை வைத்து அரசியலை நகர்த்தும் மலையக அரசியல் தலைமைகள்!
மலையைக மக்களுக்கு தொடர்ந்தும் சம்பளப்பிரச்சினை என்பது முற்றுப்பெறாத விடயமாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அரசாங்கங்களின் மாற்றமும், அறிவிப்புக்களும் தொடர்வதை போல் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொடர்வதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே, கடந்த மே முதலாம் திகதி 1700 ரூபாய் சம்பள உயர்வென்ற அறிவிப்பை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்திடமிருந்து வெளியிடப்பட்ட நிலையில், தனியார் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கான எதிர்ப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தோட்டத்தொழிலாளிகளின் சம்பள பிரச்சினைக்கான காரணங்களையும், அரசியலில் காணப்படுகின்ற முரணான விடயங்களையும் சமூக ஆர்வலர் ஒருவர் லங்காசிறியின் விசேட நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
