இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு ரணிலே பொருத்தமானவர்: டக்ளஸ் தேவானந்தா
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதிப் பதவிக்குத் தற்போதைய பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இன்று(17) காலை மேற்கண்டவாறு கூறினார்.
புதிய ஜனாதிபதி யார்..
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
போராட்டங்கள் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதுடன், தொடர்ந்து அந்த பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னரும் போராட்டங்கள் மேலும் வலுவடைந்த நிலையில் தற்போது முன்னாள் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி அந்த இடம் தற்போது வெற்றிடமாகியுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், நிரந்தர ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பதவிக்காக தேர்தலில் போட்டியிட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
