தியாக தீபத்தின் திடலில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் - திடீர் முடிவை அறிவித்த NPP அரசு
வடக்கு - கிழக்கு மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பிய தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றம் விவகாரத்தில், அநுர அரசு தலையிடாது, மாறாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபைதான் உரிய பதிலை வழங்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கவும், சிலை வைக்கவும் அனுமதி கோரப்பட்டபோது, ஏகமனதாக முடிவெடுத்து அனுமதி வழங்கிய மாநகர சபை, பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது அதனை மறைத்து, பிரச்சினைக்குத் தூண்டுதலாக இருந்துள்ளார்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இரகசியமான முறையில் இந்தப் பிரச்சினையைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தின் மீது பழியைப் போடலாம் என நினைத்தாரா என்ற கோணத்தில் விமர்சனங்களும், மக்களின் கொந்தளிப்புகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்தச் சர்ச்சைக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் சுமந்திரன் மற்றும் சி.வி.கே. சிவஞானம் என்ன பதில் வழங்குவார்கள் என்பதை காண ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றது.
இந்த விடயம் தொடர்பிலும், அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும் இன்னும் ஆழமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.
இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு