சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய சிறுபான்மை அரசியல்வாதிகள்
சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரும் தங்கள் சொத்துவிபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சொத்துக்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை
அவற்றை இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் முக்கிய சிறுபான்மை அரசியல்வாதிகள் பலரின் சொத்து விபரங்கள் இதுவரை குறித்த இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
அவர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் ராசமாணிக்கம், காதர் மஸ்தான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் ம.ஃரூப், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் சொத்து விபரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
