நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அரசியல்வாதிகள்
சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் அரசியல்வாதிகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் இவ்வாறு இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. எனவே இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கங்களின் முக்கியஸ்தர்கள்
இவர்கள் பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்படாதவர்கள் வெளிநாடு செல்ல எவ்வித தடையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களாக கடந்த அரசாங்கங்களின் முக்கியஸ்தர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த விபரங்கள் தொடர்பில் காவல்துறையினரோ அல்லது அரசாங்கமோ அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
