லட்சக்கணக்கில் குடிநீர் கட்டணங்களை பாக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள்
உத்தியோகபூர்வ இல்லங்களின் குடிநீர் கட்டணங்களை இதுவரை செலுத்தாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரிடம் இருந்து அந்த நிலுவை பணத்தை அவர்களின் மாதச் சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து அறவிட்டு தருமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நாடாளுமன்ற விவகார அமைச்சிக்கு அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இவ்வாறு நிலுவை பணத்தை செலுத்த வேண்டும் எனவும் இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதால், அவர்களின் கட்டண பட்டியலில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
இந்த அரசியல்வாதிகள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையானது தலா 20 லட்சம் ரூபாவுக்கும் மேல் என தெரியவருகிறது.
இந்த கட்டணங்களை உடனடியாக செலுத்துமாறு வார இறுதியில் அறிவிப்பும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கட்டணங்களை செலுத்த தவறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு துறைக்கு பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.



