நாட்டுக்கான கடமையை புறக்கணிக்கும் அரசியல்வாதிகள்:வரகாகொட ஞானரதன தேரர் கவலை
அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் நாட்டுக்கான கடமையை புறக்கணிப்பது குறித்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று(19.10.2022) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டுக்கான கடமையை புறக்கணித்தல்

மேலும் தெரிவிக்கையில்,“பெரும்பான்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல்வாதிகள். மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக தேசிய சொத்துக்கள் மற்றும் பொது நிதிகள் ஆபத்தில் உள்ளன.”என கூறியுள்ளார்.
இதேவேளை பெரும்பான்மையான அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்யாமல் அழித்தொழிப்பதற்கு உறுதுணையாக இருந்ததாக, மல்வத்து மகாநாயக்கர் திப்போடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட இலாபங்களுக்காக செயற்படல்

தேசத்தை பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தனிப்பட்ட இலாபங்களுக்காக இதற்கு நேர்மாறான செயற்பாடுகளையே மேற்கொண்டுள்ளதாக தேரர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானத்தில் ஹம்பாந்தோட்டை விமான நிலையம் பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.