இலஞ்சம் கோரும் அரசியல்வாதிகளால் முதலீடு செய்ய மறுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இலங்கையில் குறைந்த செலவில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க இந்திய முதலீட்டாளர்கள் விருப்பத்துடன் இருந்தாலும் இலங்கையில் அரசியல்வாதிகள் தரகு பணம் மற்றும் இலஞ்சம் கேட்பதால், அவர்கள் முதலீடு செய்ய தயங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் ( V.Radhakrishnan ) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் தான் இ்ந்தியாவில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் அப்போது முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த செலவில் தொழிற்சாலைகளை நடத்த இந்திய வர்த்தகர்கள் தயாராக இருக்கின்றனர் என்றாலும், இலங்கை அரசாங்கம் அப்படியான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதில்லை என்பதால், அந்த முதலீடுகள் நடப்பதில்லை எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
