இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்து
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மற்றும் விசாரணை கோப்புகள் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த காலங்களில் பல பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, விசாரிக்கப்படாமல் இருந்த முறைப்பாடுகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விசாரணைகள்
கொழும்பு குற்றப்பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் மூடப்பட்ட கோப்புகளை மீண்டும் திறக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை தேவைப்படும் விடயங்கள் மற்றும் கைதுகள் குறித்து சட்டமா அதிபரிடம் விசாரித்து ஆலோசனை பெறப்படவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆராயுமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அரசமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam