இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச்சென்ற அரசியல்வாதி குறித்து மனம் திறந்த மகிந்த

Srilanka Parliment Sajith mangala samaraweera
By Dhayani Feb 11, 2022 03:37 PM GMT
Report

இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச்சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார்.

மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், 1989 இல் முதன் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அன்று முதல் 31 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இருந்தார்.

தன் வாழ் நாளின் இறுதி வரை தனக்கே உரிய அரசியல் கொள்கையிலும் தொலைநோக்கு பார்வையிலும் நின்ற ஒரு அரசியல் பிரமுகர் என்றே சொல்லலாம்.

1989 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையிலிருந்து 2020 பெப்ரவரியில் அவர் ஆற்றிய கடைசி உரை வரை அந்த அரசியல் தத்துவம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

1988-89 கலவரத்தின் போது நிலவிய அநீதிக்கு எதிராக மங்கள சமரவீர ஒரு முன்னணியை உருவாக்கினார். அதன் இணை குழுத்தலைவராக பணியாற்றினேன்.

1977 முதல் 1994 வரையிலான 17 ஆண்டு கால மக்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, குறிப்பாக 88-89 பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நீதி மற்றும் சமூக ஜனநாயகத்திற்கான எனது போராட்டத்தின் வெற்றிக்காகவும் மங்கள சமரவீர  ஆற்றிய பணியை நான் இத்தருணத்தில் விசேடமாக நினைவுருகிறேன்.

1994 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு அரசாங்கங்களில் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு, நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, வெகுசன ஊடகம், வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் என்ற பதவிகளை வகித்து தனக்கு வழங்கப்பட்ட பதவிகளை புதிய திசையில் கொண்டு செல்ல மங்கள சமரவீர எப்போதும் முயற்சித்தார். அவர் நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியலில் படைப்பாற்றல் மிக்க ஒருவராவார்.

மங்கள சமரவீர சவால்களுக்கு மத்தியிலும் தனது கருத்துக்களில் இருந்து விலகாது எப்போதும் அந்தக் கருத்துகளுக்காகவே நின்றார். பின்னர் அவர் சித்தாந்த ரீதியாக வேறுபட்ட அரசியல் முகாம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், மங்கள அவர் இறக்கும் வரை எனது தனிப்பட்ட நண்பராகவே இருந்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, பல சவால்களை எதிர்கொண்டேன். அந்த சவால்களுக்கு மத்தியில் எனது வெற்றிக்காக மங்கள சமரவீர செய்த தியாகத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர் தனது அரசியல் வாழ்க்கையை தனது தனிப்பட்ட வாழ்க்கையுடன் பிணைத்துக் கொள்ளவில்லை.

மங்கள ஒரு கடுமையான விமர்சகர். மிக கூர்மையாக எதிராளியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய பிரசாரகர் என்றும் பெயர் பெற்றவர். மங்கள முற்போக்கு சித்தாந்தத்தை கொண்டிருந்த போதிலும், அவர் அந்த மாகாணத்தின் கலாசாரப் பின்னணியின் அடிப்படையிலேயே மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம்.

அமைச்சர் பதவியை வகித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது கட்சிக்காரர்களுக்காக சிறப்பான அர்ப்பணிப்புகளை செய்ய அவர் மறக்கவில்லை. இதன் மூலம் அவருக்கு தனது தொகுதி மற்றும் மாவட்டத்தின் நற்பெயரும் புகழும் கிடைத்தது.

மங்கள சமரவீர அரசியலில் இருந்து விலகிய போது, அவரது மரணம் போன்றே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்குக் காரணம் மங்கள என்பவர் அரசியலில் இருக்க வேண்டிய ஒரு அரசியல்வாதி.

போட்டி போட வேண்டிய, போராடக்கூடிய ஒரு போட்டியாளர். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியவுடன், நான் மங்களவை அழைத்து கூறினேன் 'மங்கள, நீங்கள் அரசியலில் இருக்க வேண்டும்' என்றேன். அதற்குக் காரணம், இந்த அரசியல் உலகிற்கு மங்கள போன்ற ஒரு போட்டியாளர் அவசியம்.

அரசியலை தனது தனிப்பட்ட வாழ்வில் கொண்டுபோய் பழிவாங்கல்களை மேற்கொள்ளவோ, வெறுப்பை ஏற்படுத்தவோ தயாராக இல்லாதவர். நாடாளுமன்றத்திலோ அல்லது பொது மன்றங்களிலோ எமக்கிடையிலான கொள்கை வேறுபாடுகளை நாம் தெளிவாக விமர்சிக்க வேண்டும்.

ஆனால் மனிதாபிமானம் என்று வரும் போது அரசியலும், மனிதாபிமானமும் இரண்டு விடயங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இலங்கை அரசியலில் மகத்தான பிரமுகர் ஒருவரான மங்கள சமரவீர அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மூத்த சகோதரி ஜயந்தி குணவர்தன உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது மற்றும் அரசாங்கத்தின் சார்பில் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.



மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US