கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஹரீசின் மோசமான செயற்பாடு
அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது நாட்டை பொறுத்தவரையில் தமிழ்ச் சமூகம் நீண்டகாலமாகத் தீர்வுகாண முடியாதவர்களாகவே இருந்துகொண்டு இருக்கின்றோம். தமிழர்களாகிய நாங்கள் நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இன்று வரைக்கும் ஆட்சி செய்துவரும் அரசாங்கங்கள், அரசியல் தலைவர்கள் தீர்வு திட்டங்களை வழங்கவில்லை என்ற அடிப்படையில் நாங்கள் பல ஏமாற்றங்களைப் பெற்று சர்வதேச ரீதியாக எமது மக்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எமது தலைவர்கள் மும்முரமாகச் செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள். அந்த அடிப்படையில் தான் இன்றைய ஐ.நா பிரதிநிதிகளுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.
வடகிழக்கு பிரதேசத்தில் இன ரீதியான அடக்குமுறை , இன அழிப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால் இற்றைவரைக்கும் அதற்குரிய நியாய பூர்வமான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லையே என்பதே எமது தமிழ் தரப்பிலிருந்து தொடுக்கப்படும் ஒரு வினாவாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் இந்த அரசாங்கம் நம்பிக்கையான எந்தவிதமான தீர்மானங்களையும், திட்டத்தினையும் அந்த மக்களுக்காக முன்னெடுக்கவில்லை என்ற இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சுமத்தக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் இருந்துகொண்டிருக்கின்றது.
அதன்படியே தான் நாட்டின் தலைவர் ஐ.நா சபையில் உள்ளக பொறிமுறை அடிப்படையில் இதற்கான தீர்வுகளை வழங்குவோம் என்று கூறியிருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிந்த கையோடு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செயற்படுத்த முடியாத இந்த அரசாங்கத்தில் மீது எவ்வாறு நம்பிக்கை ஏற்படும் என்ற வினாவினை தொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அதனடிப்படையிலே தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற ஒரு விடையம் சர்வதேச ரீதியாக எமது பிரச்சினைகள் கையாளப்பட வேண்டும். ஆகவே நீதியான நியாயமான அரசியல் தீர்வினை எமது மக்கள் விரும்புகின்றனர் அதனடிப்படையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே எமது அவா.
எமது தலைவர்கள் வலியுறுத்தியதை போன்று பிளவுபடாததும், பிரிக்கப்படாததுமான நாட்டிற்குள் அதி உச்ச அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் அதிகாரத்தை எமது மக்கள் நாடி நிற்கின்றனர்.
ஏனென்றால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் பட்சத்தில் தான் நாங்கள் நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்பதே எமது கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri