ஏன் எமது மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் - சாணக்கியன் சபையில் கேள்வி!

Police Parliament Batticaloa Shanakiyan
By Independent Writer Jul 07, 2021 09:41 AM GMT
Report

நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பொலிஸார் ஊடாக அச்சத்தினை விதைத்து எதனை சாதிக்கப்போகின்றீர்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில பொலிஸார் எனது தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிப்பது இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனது தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளிப்பது இல்லை.


அவ்வாறானவர்களின் பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு கோருவதற்காக அவர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவது இல்லை. தொடர்ச்சியாக அண்மைக்காலமாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

காலை 9 மணிக்கு விசாரணைக்கு வாருங்கள் 10 மணிக்கு விசாரணைக்கு வாருங்கள் என அழைத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது இளைஞர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுகின்றனர்.

அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிவில் உடையில் வரும் பொலிஸாரே இவ்வாறு கைது செய்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் அவர்கள் அதற்குப் பதிலளிப்பது இல்லை. அமைச்சர் சரத் வீரசேகர போன்றாரே அந்த சந்தர்ப்பங்களில் எங்களுக்கு உதவி செய்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாழைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்ற நிலையில் பிள்ளையானின் கட்சியினர் இருந்த போது, குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பிள்ளையானின் கட்சியினைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறுதான் மட்டக்களப்பில் பொலிஸாரின் செயற்பாடுகள் உள்ளன. அதேபோன்று மட்டக்களப்பில் மண்கொள்ளையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கையில் இரண்டு பொலிஸாரே ஈடுபட்டுள்ளனர்.

அதிகளவான டிப்பர் வாகனங்கள் மணல் ஏற்றிச் செல்லும் போது குறித்த இருவரினால் மாத்திரம் எவ்வாறு சோதனையில் ஈடுபட முடியும். அதேபோன்று மட்டக்களப்பில் ஒரு இடத்தில் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு நடந்தது என்ற போதைப்பொருள் வைத்திருந்தவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தவரின் வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டுள்ளார். இதுதான் அங்கு நடக்கின்றது. அண்மையில் இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுவாகலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அது குறித்த விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என அறிந்து கொள்வதற்காக ஓ.ஐ.சிக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். ஆனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவரிற்கு அடுத்த நிலையில் உள்ளவரின் தொலைபேசி இலக்கினை வழங்கினர். நான் அவருக்குப் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

மீண்டும் எனக்கு அவர் அழைப்பினை ஏற்படுத்தவும் இல்லை. இதுதான் மட்டக்களப்பு பொலிஸாரின் நிலையாக உள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US