எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு வாழ்க்கைச்செலவு குழுவால் எடுக்கப்பட்டது - மகிந்த அமரவீர
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு வாழ்க்கைச் செலவுக் குழுவால் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். அது, அமைச்சர் உதய கம்மன்பிலவின் தனிப்பட்ட முடிவு அல்ல. எனவே, அமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
வாழ்க்கைச் செலவுக்குழுவின் முடிவை இறுதியாக அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்ததாகவும், அமைச்சர் கம்மன்பில, அத்தகைய முடிவை அறிவித்தாலும், அத்தகைய முடிவை எடுப்பதற்கு அவர் பொறுப்பல்ல. நாட்டில் மக்கள் தற்போது ஒரு பெரிய நெருக்கடியில் உள்ளனர்.
சிலருக்கு வருமானம் இல்லை. கோவிட் தொற்றுநோயால் வருமானம் ஈட்டும் அனைத்து ஆதாரங்களும் நின்றுவிட்டன. அரசாங்கமும் இந்த நேரத்தில் ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. குறிப்பாக தற்போதைய டொலர் பற்றாக்குறை பாரிய பிரச்சனையாகியுள்ளது.
எனவே தான் அரசாங்கம் இந்த முடிவை மிகுந்த தயக்கத்துடன் எடுத்தது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை உள்நாட்டு எரிவாயு போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தனர்.
எனினும் எரிவாயு விலை அதிகரிப்பைத் தடுக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை
துணைக்குழு பல மாற்று நடவடிக்கைகளை எடுத்தது. எனவே, எரிவாயு
விநியோகஸ்த்தர்கள் அரசாங்கத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியிருந்தது என்று
அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.